இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுடன் வீழ்ச்சியடைந்திருந்த தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர சேவையில் ஈடுபடும் தொடருந்துக்கள் மூலமே அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையின் குறைவு ஏற்பட்டிருந்ததுடன் அந்த காலப்பகுதியில் தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் 16 முதல் 18 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலன்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.