நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மேலும் 24பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இதுவரை இரண்டாயிரத்து 789பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் இதுவரை மொத்தமாக இரண்டாயிரத்து 918 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் இன்னும் 118பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.