கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.
சுகாதார பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 92264 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
காலை 7 மணிக்குஆரம்பமான வாக்களிப்புக்கள் மந்தகதியில் இடம்பெற்றபோதும் தற்போது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாக்களித்து வருகின்றனர் என்பதோடு, தேர்தல் தற்போது அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றதென்றும் அவர் தெரிவித்தார்.