Saturday, September 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் ;ஸ்ரீதரன்

August 3, 2020
in News, Politics, World
0

இரணைமடு குடிநீர்தான் பிரச்சனை என்றால் என்னை நிராகரியுங்கள் வரலாற்றுத்
தோல்வியை எதிர்கொள்ள நான் தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

நேற்று யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்
அவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

இரணை மடு தொடர்பில் இப்போது யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கும்
தொலைக்காட்டி என் பெயரைக் குறிப்பிடாமல் எனக்கு எதிராக இரணைமடு நீரை தர
மறுத்தவர் யார் மறக்க மாட்டார்கள் யாழ்ப்பாண மக்கள் என்று கட்டணம்
செலுத்தப்பட்ட விளம்பரம் ஒன்றை பிரசுரித்து வருகிறார்கள்

இதன் விளக்கம் இல்லாமல் குறுகிய வட்டத்துக்குள் அவர்கள் நிற்கிறார்கள்

இரண்டு மடுக்களை இணைத்து இரணைமடுவாக ஆங்கிலேயர்கள் ஒரு குளத்தைக்
கட்டினார்கள் குளம் உருவாக்கப் பட்ட பிற்பாடு அந்தக் குளத்தை சூழ மக்கள்
அந்த தண்ணீரை நம்பி குடியேறினார்கள் யாழ்ப்பாணத்திலும் ஆங்கில மொழிமூலம்
படித்த எட்டாம் வகுப்பிற்கு மேல் சித்தி பெற்றவர்களை காணி கொடுத்து அங்கே
குடியேற்றினார்கள் அந்தக் குடியேற்ற திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பல
ஊர்களில் இருந்தவர்களும் அங்கு குடியேற்றப்பட்டார்கள் அதனை விட 1956,1983
ஆம் ஆண்டு தென்பகுதியில் ஏற்ப்பட்ட வன்முறைகளாலும் பெரும்பகுதியான மக்கள்
அந்த மண்ணிலே வந்து குடியேறினார்கள் இண்டைக்கு மலையக பகுதிகளில் இருந்த பல
மக்கள் குடியேறி வாழ்கின்றார்கள் இவ்வாறு காலத்துக்கு காலம் விவசாயம்
செய்து கொண்டு வருகின்ற போது இப்போது 42 ஆயிரம் ஏக்கர் வயல்கள் அக்
குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய நிலம் உள்ளது

42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்தில் 20 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்திற்கு
மட்டுமே நீர் பாச்சக் கூடிய வாய்க்கல்கள் உண்டு மிகுதி 22 ஆயிரம்
ஆக்கர்களும் மானவாரி நிலங்கள். வாய்க்கால்கள் உள்ள 20 ஆயிரம் ஏக்கர்
வயல்களில் ஆக கூட 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சிறு போகம் செய்யக் கூடியதாக
உள்ளது இது புனரமைப்பு செய்வதற்கு முதல் 7000அல்லது 8000 ஏக்கர்களாக
இருந்தது அதிலும் கடந்த வருடம் 15 ஆயிரம் ஏக்கர் விதைத்து இறுதி நேரம்
தண்ணீர் இல்லாமல் குளத்தில் பக்கோ போட்டு வெட்டித்தான் தண்ணீர்
எடுத்தார்கள் குடிக்கவும் தண்ணீர் வைத்திருக்க வில்லை குளத்தில் கடைசி 10
அடி தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விதி உண்டு காரணம் மாடுகள்
உயிரினங்கள் குடிப்பதற்காக அதனையும் தாண்டி கடந்த முறை தண்ணீரை வெட்டி
எடுத்தார்கள்

இம்முறை சித்திரையில் சிறு மாரி பொழிந்த வடியால் இப் பிரச்சனை தோன்ற
வில்லை அதனால் குளத்தில் சிறியளவு தண்ணீர் உள்ளது மற்றைய உயிரினங்களுக்காக
ஆனால் கிளிநொச்சியை சார்ந்த யாருமே குடிக்க தண்ணீர் தர மாட்டோம் என்று
சொன்னது கிடையாது அங்கு உள்ள விவசாயிகள் கேட்ப்பது வயல் நிலங்களுக்கான
உற்ப்பத்தி பிரச்சனைகளை முதலிலே தீருங்கள் அதற்கு ஏதாவது ஒரு முடிவை
சொல்லுங்கள் 42 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கருக்குதான் தண்ணீர் பாச்சக்
கூடியது அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் தான் சிறுபோகம் செய்யலாம் இவ்வாறு
நிலமை உள்ளது அதற்கு ஒரு மாற்றத்தை செய்து தாருங்கள் என்று கேட்டால் அதற்கு
விடை இல்லை

உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் கிளிநொச்சியில் உள்ள பூநகரி பிரதேச
செயலாளர் பிரிவில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை மாரிகாலத்திலும் கோடை
காலத்திலும் இப்போதும் நீர்த்தாங்கிகளிலையே நீர் விநியோகிக்கப்படுகிறது
அங்கு கூட இரணைமடுக் குளத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படுவதில்லை
கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட கல்லாறு போன்ற பகுதிகளில்
குடிக்க தண்ணீர் இல்லை

கிளிநொச்சியில் தண்ணீர் இல்லை குடிக்க, விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத
நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு
விரோதத்தை கட்டி வளர்க்கலாம் இதனை அரசாங்கம் திட்டமிட்டு செய்தது இதனை
அரசியலாக சிலர் காவிச் செல்கின்றார்கள்

நான் கூட யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை நியாயத்தை
சொன்னேன் அதனை விட அங்கு உள்ள விவசாயி யார் என்று பார்த்தால் இரணை மடுவின்
கீழ் உள்ள வயல் காணிகளில் 60 வீதமானவை யாழ்ப்பானத்தை சேர்ந்தவர்களுடைய
காணிகள் குத்தகைக்குதான் அங்கு கொடுத்திருக்கிறார்கள் அங்கு
பயிர்ச்செய்கையை நிறுத்தினால் பொருளாதாரம் விழும் யாழ்ப்பாணத்திற்கான அரிசி
வழங்கல் வீழ்ச்சி பெறும் நாங்கள் அரிசிக்காக யாரை தங்கி வாழ் வேண்டும் யாரோ
தென்பகுதியில் உள்ளவனையும் வெளிநாட்டு இறக்குமதிகளையும் தங்கி வாழவேண்டும்

எங்களூடைய சுய பொருளாதாரத்தை அழிப்பதிலும் வேலை இல்லை என்கின்ற நிலமையை
ஊவாக்குதல் இவ்வாறு போனால் சுய பொருளாதாரம் என்ன உழைப்பு என்ன சுய
பொருளாதாரம் என்ன
குடிநீர் பிரச்சனையை தீர்க்க நாங்கள் முக்கியமான முயற்சிகளை செய்ய்தோம்
பாலியாறு எப்போதும் கடலுக்கு தண்ணீர் போகின்ற ஆறு
,மண்டைக்கல்லாறு,குடமுறுட்டி போன்ற ஆறுகளாலும் கடலுக்கு தண்ணீர் போகிறது
எத்தனையோ வளங்கள் உள்ளது

பாலியாற்ரு திட்டத்திற்க்காக முன்மொழிவு கொடுத்து எமது கட்சியால் மூன்று
தடவைக்கு மேல் பேசி 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது ஒதுக்கப்பட்ட
நிதியில் முதலில் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்
கொண்டுவருகின்ற திட்டம் உருவாக்கப்பட்டது இதனை விட சாவகச்சேரியில்
மனோகணேசனில் நிதி 1000 மில்லியனில் ஒரு குளம் அமைப்பதற்கு அப்போதைய ஆளுநர்
சுரேன்ராகவனினால் அத்திவாரம் இடப்பட்டு அதற்கான வேலை செய்யப்பட்டது அதன்
பின்னரும் இரண்டு மூன்று திட்டங்கள் உருவாக்கப்பட்டது

இவை எல்லாம் நிலத்தடி நீரையும் நன்நீராக்கி 24 மணிநேரமும் குடிதன்ணீர்
வழங்கக் கூடிய திட்டங்களை கொண்டுவரப்பட்டது இவை மைதிரியின் அரசியல் புரட்சி
சஹரானின் குண்டுவெடிப்பு ஜனாதிபதி தேர்தல் கொரோணா என்று இத் திட்டங்கள்
கிடப்பில் போடப்பட்டுள்ளது இதுதான் இதன் உண்மைத் தன்மை இதன் பிறகும்
இரணைமடு தண்ணிரை தரவில்லை என்று நீங்கள் எண்ணினால் நான் துரோகி என
நினைத்தால் ,என் மீது நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து எனக்கு
வாக்களிக்க வேண்டாம் என கை கூப்பிக் கேட்டுகொள்கின்றேன் இதனால் இத்
தேர்தலில் என்னை தோற்கடித்தால் இவ் வரலாற்றுத் தோல்வியை நான் ஏற்கத்தயாராக
உள்ளேன் என மேலும் தெரிவித்தார்

Previous Post

தமிழகத்தில் ஒரே நாளில் 98 பேரின் உயிர் வேட்டை

Next Post

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று

Next Post

கண்டி எசல பெரஹரா உற்சவத்தின் இறுதி பவனி இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures