இலங்கையில் பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்று மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையின் போது பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்றே பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.
இதேபோன்று எப்போதும் ஆசனங்களுக்கு ஏற்றால் போன்று பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவாறு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.