Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சீ.வி.விக்னேஸ்வரன் தேர்தலை எதிர்கொள்வது நேரத்தினையும் வாக்கையும் வீணடிக்கும் செயல் !

July 29, 2020
in News, Politics, World
0

சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதானது தமிழரின் வாக்கினையும், அவரது நேரத்தினையும் வீணடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். அதியுச்ச பெரும்பான்மையைக் கொண்ட மாகாணசபையை வைத்துக் கொண்டே சொல்லிக் கொள்ளும் அளிவில் எதனையும் செய்யாதவர் பாராளுமன்றம் சென்று எதனைச் சாதிக்கப் போகின்றார்? என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதபை; புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா வெளியட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
2020ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பற்பல அரசியல் கட்சிகளும் சிறுசிறு கட்சிகளைக் கூட்டு இணைந்த கூட்டணிகளுக்கும் பாராளுமன்ற ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றன. இந்த வகையில் தமிழர்களின் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்த்து வைக்கும் முனைப்புடன் சி.விக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்ற ஆசனத்தை கைப்பற்றும் மும்முறமான முயற்சியினை தனது கட்சியினையும் கூட்டினைந்த கட்சியினையும் இணைத்து முன்னோக்கி செல்கின்றார்கள். இவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படின் எதனை சாதிக்கப் போகின்றார் என எமக்கு விளங்கவில்லை.

ஏனெனில் 1987ம் ஆண்டு 13ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு இதனைத் தொடர்ந்து மாகாண சபை முறையானது தேற்றுவிக்கப்பட்டது. இருப்பினும் எப்பகுதி மக்களுக்கு இலங்கைத்தீவில் இனப்பிரச்சனையும், நிரந்தர தீர்வின்மையும் காணப்பட்டதோ அம்மக்களுக்கு இலங்கையிலுள்ள 09 மாகாணங்களில் இறுதியாகவே 08வதுஇ 09வது மாகாணசபை ஆட்சிமுறையானது ஸ்தாபிக்கப்பட்டது. குறிப்பாக 2013ம் ஆண்டுக்குப் பின்னரே வடமாகாண சபையானது மாகாண சபைத் தேர்தலினை எதிர் கொண்டு வடமாகாண சபை நிர்வாகத்தை செயற்படுத்தத் தொடங்கியது.

அக்காலப் பகுதியில் தேர்தலுக்கு முன் மாகாண சபையினை முழுமையாக கைப்பற்றினால் முதலமைச்சராக யாரை முன்நிறுத்துவது என்ற பெரிய கேள்வியாக காணபட்ட போது உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வு பெற்று இருந்த சி.விக்னேஸ்வரன் ஜயா அவர்களை இப் பதவிக்கு பொருத்தமானவராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் வடமாகாணம் உட்பட யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலும் பெருவாரியான வாக்குகளை மக்கள் அளித்து அதிபொரும்பான்மையான 30 ஆசனங்களுடன் வட மாகாணத்தின் தேர்தலூடாக 01வது முதலமைச்சராக தமிழ் மக்களின் ஏகதெரிவாக சி.விக்னேஸ்வரன் ஜயா தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் அரியாசனத்தில் அமர வைத்ததுடன் அவர் தமக்கு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துவார் என்ற அவாவில் இருந்தனர்.

ஏனெனில் சமகாலத்தில் பல துறைகளிலுள்ள கல்விமான்களில் நீதி துறையில் இருந்த உயர்ந்த நிலையில் இருப்பது தனி அடையாளமாக காணப்பட்டது. 1970ம் ஆண்டிற்கு பின் இலங்கைச் சட்டக் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்பட்டு அங்கு முதன்மையாக விளங்கியதுடன் அக்காலப்பகுதியில் இவரால் மொழிமாற்றப்பட்ட சில புத்தகங்களும் குறிப்புகளும் இன்றைய மாணவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் நேர்மையாக சட்டத் தொழிலை ஆரம்பித்து தனது முயற்சியின் மூலம் நீதி துறைக்கு தெரிவாகி இவங்கையின் உயர்நிலை நீதிமன்றமான உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக கடமையாற்றியவர் என்ற காரணத்தினால் தமக்கு ஒரு விமோச்சனத்தை தருவார் என சாதாரண மக்கள், கல்வி கற்ற குடிமகன் முதல் சர்வதேச புலம்பெயர் தமிழ் மக்களும் இவரின் அணுகுமுறைகளை ஆவலுடன் அவதானித்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் மாகாணசபைக்கென்று வறையறுக்கப்பட்ட அதிகாரங்கள் காணப்பட்ட போது அவ் அதிகாரங்களுக்குட்பட்டு செய்யவேண்டிய செயற்பாடுகளையும் கருமங்களையம் இவர் சரிவரச் செய்ய வில்லை என்பது எமது ஆதங்கமாகும்.

ஏனெனில் யுத்தம் நிறைவடைந்து 04 வருடங்களின் பின் நடாத்தப்பட்ட வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தலும், ஆட்சி அதிகாரத்தின் தீர்மானங்களை நிறைவேற்ற கூடியளவான நிறைவான ஆசனங்களும் 30ஃ36 என்ற ஆசனங்கள் கிடைத்தது. அதாவது முதலமைச்சர் தலைமையேற்று நின்ற கட்சியானது 30 ஆசனங்களினைப் பெற்றிருந்நது. ஆனால் 40 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் அவற்றில் சிலவற்றைத் தவிர மற்றைய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்;றப்படவும் இல்லை அவையும் முக்கிய பயனளிக்கக் கூடியளவாக அமையவில்லை.

இக் காலப்பகுதியில் மாகாண முதலமைச்சருக்கு பின்வரும் பிரதான சவால்கள் காணப்பட்டது. மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டம், மக்களின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் புனருத்தாரனம், யுத்தத்தினால் அங்கவீனமானவர்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, விளையாட்டு, கலாச்சார, முன்னேற்றம், முன்னாள் பேராளிகளுக்கும் புனர்வாழ்வழிக்கப்பட்டவர்களுக்குமான வேலை வாய்ப்பு, போதைப் பொருள் பாவனைகளை ஒழிப்பதற்கான செயற்திட்டங்கள், திட்டமிட்டு உள்நுழைகின்ற கலாச்சார சீர்கேடுகள், இராணுவத்திடமிருந்து காணி விடுவிப்புக்கள், நீர்ப்பாசனம், வீதி போக்குவரத்து, கடற்தொழில், இளைஞர் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிக பெண்கள் செல்லும் சூழ் நிலைகள், திட்டமிட்ட நுண்கடன் கம்பனிகளின் உள்வரவு, கடன் மற்றும் குத்தகை நிதி கம்பனிகளின் வரவுகள், தமிழர்களை நோக்கி மறைமுகமாக பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்கள் எனப் பல சவால்கள் காத்திருந்த போதும் இவரது ஆட்சிக் காலமானது காலத்தை வீணடிக்கும் ஒரு அசமந்த ஆட்சியாகவே காணப்பட்டது.

முதலமைச்சர் பதவிக்கு ஒரு திறமையான ஓய்வு பெற்ற நீதியரசர் அமர்ந்து செயற்படுத்தப் போகின்றார் என்றபோதே சாதாரண குடிமகனுக்கும் நமக்கு விமோசனம் கிடைக்கப் போகின்றது என அவாவில் இருந்தனர். ஆனால் அனுபவத்தைக் கொண்ட இவர் நான்கு ஆண்டு ஆட்சிக் காலத்தில் வடமாகாணத்தில் எதனைச் செய்தார் என பிரத்தியோகமாக குறிப்பிடப்படும் அளவிற்கு எதுவும் அமையவில்லை.

குறிப்பாக வடமாகாணத்தில் ஏனைய மாகாணங்களை விட செய்வதற்கான பல அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளன. அதே வேளை ஒப்பீட்டளவில் எமது மாகாணமும் பௌதிக வளங்கள் ரீதியாக இலங்கையில் உள்ள ஏனைய மாகாணத்துடன் ஒப்பிடும் போது வளம் குன்றிய ஒரு மாகாணமல்ல அதாவது மாறுபட்ட தரைத் தோற்றம், மண்வளம், களப்புக்கடல், இடைக்கடல், ஆழ்கடல் போன்ற மூவகையான கடல் வளங்களையும், சுற்றுலா கைத்தொழிலுக்கு மிகவும் உகந்த கரையோர வளங்களையும், ஆளணியினையும், இடப்பரப்புக்களையும், வனவிலங்குகளையும், விவசாயம், தெங்கு உற்பத்தி, பனை உற்பத்தி, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி கைத்தொழில், விலங்கு வேளாண்மை, துறைமுக அபிவிருத்தி, ஏற்றுமதி நோக்கிய கைத்தொழில், மட்பாண்ட களிமண், ஓட்டுக் கைத்தொழில் சீமேந்து உற்பத்தி, உப்பு, காற்றாலை மற்றும் சூரிய ஒளியிலான மின்சார உற்பத்தி, கல்வி தகவல் தொழில்நுட்பம் போன்ற பலவற்றினை செய்வதற்கான தேவைப்பாடுகளும் வளங்களும் இம்மாகாணத்தில் காணப்பட்டது. இவற்றினை தனது ஆட்சிக்காலத்தில் ஒரளவேனும் ஆரம்பித்திருந்தாலும் அவை எதிர்காலத்தில் படிப்படியாக வளர்ந்திருக்கும் அத்துடன் தேசிய வருமானத்தில் 15 சதவீதத்திற்கான பங்களிப்பினையும் வடமாகானத்திலிருந்தே கொடுப்பதற்கான சாத்தியக் கூற்று வளங்களைத் தன்னகத்தே கெண்டுள்ளது. ஆனால் இவற்றினை உரியவாறு பயன்படுத்தவே இல்லை.

இதே நேரம் உலகலாவிய தமிழர்களுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளம் காணப்பட்டது. தமிழர்களுக்கென்று ஒரு அரசு வடக்கு கிழக்கினையும் இணைத்து சுயநிர்ணய சுபீட்சமான நாடாக உருவாகும் என பலர் எதிர்பார்த்த போதும் அது விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு யுத்தம் நிறைவடைந்ததுடன் 2009ம் ஆண்டுடன் அக் கனவும் கலைக்கப்பட்டு விட்டன. ஏன் இலங்கைத் தீவினைப் பொறுத்தவரையில் சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கல்வி, கலாச்சாரம், உழைப்பு விடாமுயற்சி, புலம்பெயர் தேசத்தில் வாழ்பவர்களால் உள்வருகின்ற அந்நியச் செலாவணி, அவர்களது திருமணமுறை மற்றும் பொருளாதாரத்தில் அவர்கள் எதனையும் சாதிப்பார்கள் என்ற பயம் கலந்த நல்நோக்குடனேயே தமிழர்களை உற்று நோக்கி வருகின்றனர்.

தனிநாட்டிற்காகப் போராடி அது இல்லாதோழிக்கப்பட்டதன் பின் ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசின் கீழ் மாகாண சபை முறை வருகின்ற போது தனி நாட்டினை பிரித்தெடுத்து ஆட்சி செய்ய முற்பட்ட நாம் அரசின் கீழ் இவ்வாறான பல இயற்கை வளங்களையும், அயராது உழைக்;கின்ற மனித வளங்களையும் தன்னகத்தே கொண்ட வடக்கு மாகாண சபையானது அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் நோக்கிய எத்தீர்மானங்களையும் நிறைவேற்றவில்லை, நடைமுறைப்படுத்தவும் இல்லை. மாகாண சபையில் இலகுவில் தீர்மானங்களை எட்டக் கூடிய வாக்குப் பலம் இருந்தவேளையில் தமிழர்களுக்கான ஆட்சி என்றால் இப்படித்தான் சகல செழிப்புடனும் இருக்குமென்று இலங்கைத் தீவின் ஏனைய மாகாண சபைகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துக் காட்டும் விதமாக ஒரு செழிப்பான அபிவிருத்தி நோக்கிய ஒரு ஆட்சி முறையினை சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கொடுத்திருக்கலாம்.

இம் மாகாண சபையின் அதிக அபிவிருத்தியையும் அதை நோக்கிய நகர்வுகளையும் தேசிய வருமானத்திற்காக பங்களிப்பினையும் எண்ணி சிங்கள தலைவர்களும் மக்களுமே தமிழர்களுக்கு இவர்கள் கோரியவாறு நாட்டை பிரித்துக் கொடுத்திருக்கலாம் என என்னும் அளவிற்கு அபிவிருத்தி நோக்கிய பல செயற்பாடுகளை செய்யக் கூடிய சக்தியும் அதிகாரமும் பண பலமும் மாகாண சபை முறையில் முதலமைச்சருக்கு காணப்பட்டது. இவற்றை பயன்படுத்தி 05 மாவட்டங்களின் அபிவிருத்தியையும் மக்களின் தேவை நிறைவினையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ யுத்தத்தில் இடம்பெயர்ந்து மக்களுக்கான மீள்குடியேற்றத்தையோ நாட்டிற்காக போராடிய, நிற்கதியில் நிற்கின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னால் போராளிகள் அவர்களது குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்றவர்களின் பிரச்சனைகள் என பலவற்றையும் நிறைவேற்றாத ஜயா அவர்கள் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி ஊடாக பாராளுமன்றம் சென்று எதனை சாதிக்கப் போகின்றார்.

வட மாகாணமானது விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த போது அவர்கள் (பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின்) கல்வி, சுகாதாரம், கலாச்சார மேம்பாடு, நீதித்துறை, நிதி, மீன்பிடி, விவசாயம், வனபாதுகாப்பு, உபபயிர்ச் செய்கை, சுற்றுலா கைத்தொழில், சமூக நலன் மேன்பாடு, தகவல் தொழில் நுட்ப விஞ்ஞான அபிவிருத்தி, தொழில் நுட்பவியல் சாதனங்களின் உருவாக்கம் எனப் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான பொருத்தமான இடங்களும் அடையாளம் காணப்பட்டு முன்னெடுக்கப்பட்டன. உதாரணமாக வெள்ளாங்குளம் பண்ணை, முழங்காவில் பூநகரிக்கு இடைப்பட்ட மரமுந்திரிகைத் தோட்டம், ஒட்டிசுட்டானுக்கு அண்மையிலுள்ள தோட்டம், அம்பாள்புரம் மாங்குளத்திற்கு இடைப்பட்ட தோட்டம், மண்ணித் தீவு சுற்றுலா கைத்தொழில், கொக்குலாய்; முல்லைத்தீவு அண்மித்த சுற்றுலா கைத்தொழில், தலை மன்னார், காங்கேசந்துறை, செம்பிறைப் பற்று போன்ற துறைமுக அபிவிருத்தி, கிளிநொச்சி நகரை அண்டிய அறிவியல் கண்டு பிடிப்பு நிலையங்கள், மாந்தை கிழக்கு பிரதேசத்தில் கூறாய் நீர்பாசன திட்டம், இரணைமடு குளத்திலிருந்து பூநகரி கடலை நோக்கி வெளியேறுகின்ற மேலதிக நீரீனை அப்பிரதேச விவசாயத்திற்கு பயன்படுத்துகின்ற திட்டங்கள் எனப்பல திட்டங்கள் காணப்படுகின்றது. இத் திட்டங்களில் சாதக தன்மையினை பயன்படுத்தி இவற்றினை வட மாகாணச் செய்திருக்கலாம். பல பண்ணைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்பட்டன. இவற்றினை வட மாகாணசபை விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வந்து பொது மக்களுக்கோ முன்னாள் போராளிக்கோ அல்லது அவர்களது குடும்பங்களுக்கோ வாழ்வாதார வேலைவாய்ப்பினை அளித்திருக்கலாம்.

வட மாகாண சபையால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வேலைவாய்ப்புகளில் அதாவது சிற்றூழியர்களுக்கான வேலை வாய்ப்புகளில் உதாரணமாக விரைவூர்தி (யுஅடிரடயnஉந) சாரதிகள் மற்றும் வாகன சாரதி, சுகாதார தொழிலாளர்கள் சிற்றூழியர்கள், காவலாளிகள், முகாமைத்துவ உதவியாளர்கள், தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் வேலை வாய்ப்புகளில் திறமையுள்ள முன்னாள் போராளிகளை அவர்களது திறமைகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு முறைகளில் 10 அல்லது 20 வீத இட ஒதுக்கீட்டை அளித்திருக்கலாம்.

இதனால் நாட்டிற்காகப் போராடிய அவர்களை வீதியில் கைவிடும் நிலையினை தவிர்த்திருப்பதுடன் வெளிப்படையாக அவர்களின் திறமைக்கேற்ப ஆட்சேப்பில் உள்வாங்கி இருக்கலாம். புலம் பெயர் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய வைத்து அவர்களினால் ஸ்தாபிக்கப்படுகின்ற கைத்தொழில் நிலையங்கள் மூலம் எமது இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருந்திருக்கலாம். தோழில் வாய்ப்புக்களினை நாமே ஏற்படுத்திக் கொடுத்திருப்போமானால் எமது இளம் யுவதிகள், குடும்பப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கோ அல்லது கொழும்பை நோக்கியோ, கைத்தொழில் சாலைகளுக்கோ வேலை வாய்ப்பினைப் பெற சென்றிருக்க மாட்டார்கள். எமது கலாச்சார விழுமியங்களும் பாதிக்கப்பட்டிருக்காது . ஒரளவேணும் பாரம்பரிய கலாச்சார ஸ்திர தன்மையில் நாம் இறுக்கமாக இருந்திருப்போம்.

இவ்வாறு இக் கட்டுரையில் முழுமையாக பலவிடயங்களை விரிவாக குறிப்பிட முடியாவிடினும் பல விடயங்களை சுருக்கமாக கூறி இருப்பதுடன் கிடைத்தற்கரிய சந்தர்ப்பத்தை நிழுவ விட்டுவிட்ட சி.விக்னேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றம் சென்று புதிதாக மக்களுக்கு எத்தீர்வினை அல்லது பொருளாதார முன்னேற்றத்தைப் பெற்றுக் கொடுப்பார்.

ஆனால் இன்றும் சில மக்கள் சி.விக்னேஸ்வரன் ஜயா என்ற மாயையிலிருந்து விடுபடாது அவரை உயர்வாகவே பார்க்கின்றனர். அவர் ஒரு கல்விமான் என்ற ரீதியில் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். ஆனாலும் யதார்த்த அரசியல் என்பது இவருக்கு பொருந்த வில்லை. இவர் தன்னை உணர்ந்து நீதியரசருக்கான ஓய்வூதிய பணத்தைப் பெற்றுக் கொண்டு, நீதித் துறையின் பல முன்னேற்றங்களையும், இளம் தமிழ் சட்டத்தரணிகளின் அபிவிருத்தி முன்னேற்றம், இவர்களது திறன் விருத்தி, நீதித்துறையின் முன்னேற்றத்திற்கான ஆய்வுகள், சி.ஜே.வீரமந்திரி போன்று சர்வதேச நீதிமன்ற விவகாரங்கள் மற்றும் எமது தமிழர் பிரச்சனையினை சர்வதேசம் வரை கொண்டு செல்லும் செயற்திட்டம் என்பவற்றில் ஈடுபட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமென தோன்றுகின்றது.

இதை விடுத்து பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதானது தமிழரின் வாக்கினையும், அவரது நேரத்தினையும் வீணடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். இவரால் புதிதாக பராளுமன்றம் சென்று சாதிப்பதற்கு எதுவும் இல்லை.

Previous Post

தேர்தல் தொடர்பில் இதுவரை 5,400 முறைப்பாடுகள் பதிவு!

Next Post

முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழகம் ;வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிப்பு

Next Post

முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழகம் ;வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures