நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று மாத்திரம் 9பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் அடையாளம் காணப்பட்டவர்களில் 656பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2103 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் முப்படையினர் ஊடாக முன்னெடுக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 606 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.