புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு செய்திருக்கவேண்டும் என வணபிதா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வொன்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் வணபிதா ஜெயக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு வராவிடின் பதவியை இராஜினாமா செய்வோம் என தெரிவித்தவர்கள் அவ்வாறு இராஜினாமா செய்து தங்கள் நேர்மையை வெளிப்படுத்தியிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அதன் பின்னர் தேர்தலை சந்தித்திருக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் செய்பவர்களிடம் நேர்மை வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.