Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர்கள் சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது ; சி.சிறீதரன்

July 20, 2020
in News, Politics, World
0

தமிழர்கள் இனவிடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

இன்றைய தினம் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் இந்த நாட்டிலே மிக முக்கியமான தருணத்திலே நிற்கின்றோம் மிக நெருக்கடியான தருணத்திலே நிற்கின்றோம் காரணம் தேர்தல் வருகின்ற போது தான் அந்த தேர்தல் காலத்திலே எங்கள் கட்சியின் உடைய கடந்த கால செயற்பாடுகள் இந்த அடுத்த 5 ஆண்டுகளிலே என்ன விடயங்களை கையாளப் போகின்றது என்ற முக்கிய விடயங்களை தேர்தல் களத்திலே நாங்கள் சொல்லுகின்றோம்

60 வருடங்களுக்கு முதல் இந்த மண் எவ்வளவு காடாக இருந்திருக்கும் இந்த பிரதேசம் எவ்வாறு இருந்தது இந்த பிரதேசத்தில் நாங்கள் குடியேறி எவ்வாறு மாற்றி அமைத்தோம் இன்றைக்கு 60 ஆண்டுகள் கடந்து இந்த இடம் எப்படி மாறி இருக்கிறது ஏன் நாங்கள் இந்த இடத்திலே குடியேறினோம் அதற்கான காரணம் என்ன

58 க்களில் அல்லைக் கந்தளாயிலே முதன் முதலில் 156 விவசாயிகள் சிங்கள பொலிசார் பார்த்திருக்க சிங்கள காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள் அதே ஆண்டுகளில் தான் அநுராதபுரம் பகுதியில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் திருகோணமலையில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் மலையக பகுதியில் வாழ்ந்த எங்கள் மக்கள் இனம் என்பதனை மையமாக வைத்து பலி எடுக்கப்பட்டார்கள் இவ்வாறு எல்லாம் கடந்து வந்த இனப்படுகொலைகளைத் தாண்டி நாங்கள் எங்களுடைய ஈழதேசத்திலே குடியேறி நில அடையாளங்களோடு எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டோம் அடையாளப்படுத்தி வாழுகின்ற காலத்தில் தான் ஒரு பெரும் தலைவர் பிரபாகரனுக்கு கீழே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம் தந்தை செல்வாவின் வழிகாட்டலிலே அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஒரு ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவம் இந்த மன்ணிலே முதன்மை பெற்றிருந்தது அதற்காக பல ஆயிரக்கணக்கானவர்களை இந்த மண்ணிலே விதைத்திருக்கின்றோம் பல லட்சக் கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம் கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்திருக்கின்றோம் இவற்றை எல்லாம் இழந்து தான் இந்த மன்ணிலே ஒரு தேர்தல் மூலமாக அடுத்த வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றோம் இந்தக் காலத்திலே எங்களை இழந்து போனால் அல்லது நாங்கள் தமிழினம் என்பதனை சொல்ல மறந்து போனால் எமது வாழ்க்கையும் இல்லாமல் போகும் என்பதனை பலர் விளக்கமாக சொன்னார்கள்

33 கட்சிகள் இருக்கின்றன பல நூற்றுக் கணக்கானவர்கள் இங்கு போட்டியிடுகிறார்கள் காரணம் இலங்கையில் இருக்கின்ற அரசியல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கூறுபோட்டு எங்களிடம் இருக்கின்ற அரசியல் பலத்தை எங்களிடம் அடிப்படையாக உள்ள கொள்கையை சிதைப்பதற்கான முழு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள் அந்த முயற்சிகளில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நாங்கள் எங்களுடைய வாக்குக்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிதறடித்து யாரும் இல்லாத இனமாக அழிந்து போகப் போகின்றோமா

நாங்கள் 2010 இல் அரசியல் பயணித்த காலம் முதல் எங்கள் அரசியல் பலத்தை அழிப்பதற்காக இதே கோட்டாபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது எமது அலுவலகத்திலே குண்டுகளைக் கொண்டுவந்து வைத்தார்கள் எமது கரைச்சி பிரதேச சபை தவிசாளரை கைது செய்து சிறையிலே அடைத்தார்கள் 13 மாதங்கள் எந்த காரணமும் இல்லாமல் சிறையிலே இருந்தார்கள் எமது கட்சிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த் போது சிங்கக்கொடியோடு பலர் வந்து கலேறிந்தார்கள் உட்புகுந்து அடித்தார்கள் அலுவலக செயற்பாடுகளை தடுக்க முயன்றார்கள் சட்டரீதியாகவும் முயன்றார்கள் ஆறு தடவைகள் விசாரணைகளுக்காக நான்காம் மாடி சென்று வந்திருக்கின்றேன் ஏன் இவ்வளவும் நடந்தது தமிழ்த்தேசியம் என யாரும் சிந்திக்கக் கூடாது தமிழ்தேசியத்தின் கீழ் நீங்கள் யாரும் ஒன்றாக இணையக் கூடாது தமிழ்ர்கள் சேர்ந்து இனவிடுதலைக்காக பயணிக்கக் கூடாது என்பதில் சிங்கள அரசாங்கம் மிகவும் கவனமாக உள்ளது

ஆகவே எங்களுக்கு ஒவ்வோரு தேர்தலும் போர்க்களம் எங்களிடம் இப்போது ஆயுதங்கள் இல்லை நாங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் எங்களால் முடியும் ஆனால் ஆயுதங்களை இப்போது நாங்கள் தூக்கவில்லை ஆயுதப் போராட்டம் பற்றி நாங்கள் பேசவில்லை அடுத்த சந்ததி துப்பாக்கி தூக்கவேண்டும் என்றும் நாங்கள் சொல்லவில்லை நாங்கள் கேட்கின்றோம் இருக்கின்ற இந்தக் காலத்திலே எங்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதற்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு எங்களுக்கு மிக அவசியமானது அதனால்தான் ஒரு பலமான சக்தியாக நாங்க|ள் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது அந்தப் பலத்தை வாக்கின் ஊடாகத்தான் பெறமுடியும் இதனை கடந்த ஆண்டுகளில் நீங்கள் செய்திருக்கின்றீர்கள் இம்முறை இருக்கிற சிதைவுகளும் பல நெருக்கடிகளூம் எங்கள் மக்களை கொஞ்சம் ஆட்டிப் பார்கிறது இது எங்களை சிதறடிப்பதற்கான முயற்சி என்பதனை கருத்தில் கொண்டு கடந்த முறை வழங்கிய ஆணையை மேவிய ஆனைய இம் முறை நீங்கள் தர வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்

குறித்த பிரச்சாரக் கூட்டமானது தர்மபுரம் பகுதியில் மாலை 5மணிக்கு கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா தலைமையில் நடைபெற்றது இப் பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களான சிவஞானம் சிறீதரன், சுமந்திரன், ஆகியோரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் ஐயம்பிள்ளை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதி இரத்தினமணி . கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்

Previous Post

நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழிக்குள் தள்ளிய ராஜபக்ச அரசு !

Next Post

தபால் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கு இன்று வாய்ப்பு!

Next Post

தபால் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கு இன்று வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures