Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் சுமந்திரன் ஆஜர்

July 16, 2020
in News, Politics, World
0

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணி தொடர்பான வழக்கு இன்று திருகோணமலையில் உள்ள மாகாண மேல்நீதி மன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் வழக்காளியும் ஆலயத்தின் நம்பிக்கை பொறுப்பாளருமாகிய கோகிலரமணி அம்மா சார்பில் வழக்கறிஞரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம.ஏ. சுமந்திரன் ஆஜராகி இருந்தார்.

இதன்போது எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

காலை 10.40 மணி முதல் 12.30 வரை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் அரச தரப்பிலே இன்றைய தினம் முன்னெடுத்த வாதமானது.

இது புராதன பொக்கிசம் சம்மந்தப்பட்ட விடயம் என்பதனால் தேசிய புராதன பெக்கிசம் என்பதனால் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு நியாயதிக்கம் இல்லை என்றும் கொழும்பில் உள்ள மேல் முறையீட்டு நீதிமன்றத்திலே தாக்கல் செய்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.
ஏற்கனவே இந்த வாதம் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டு இந்த வாதம் நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் இடைக்கால உத்தரவு சம்பந்தமாக நாங்கள் வாதிட்ட போது எப்படியாக மாகாண மேல் நீதி மன்றத்திற்கு நியாதிக்கம் கிடைத்திருக்கின்றது என நான் வாதிட்டு இருந்தேன்.

அதை மேல் நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு இந்த வழக்கை தொடர்ந்து நடாத்தி இருக்கின்றது. மேல் நீதிமன்றத்திற்கு எதிராக எந்த முறையீடுகளும் அரச தரப்பு செய்திருக்கவில்லை. எனவே ஏற்கனவே அமுலில் இருக்கும் உத்தரவை மாற்ற முடியாது என்பதே என்னுடைய வாதமாக இருந்தது.

இந்த இரண்டு வாதத்தையும் நீதிமன்றம் முழுமையாக கேட்டுக்கொண்டு எழுத்து மூலமான சமர்ப்பணங்களுக்காக செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு வழக்கு தவணை குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான எழுத்து மூல சமர்ப்பணங்களை நீதிமன்றம் ஏற்றதன் பின்னர் இறுதித் தீர்மானம் ஒன்றை நீதிமன்றம் கொடுக்கும் என தெரிவித்தார்.

Previous Post

கொரோனா நெருக்கடி; 14,500 ரூபா வழங்க தீர்மானம்

Next Post

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Next Post

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures