மட்டக்களப்பில் நேற்று இரவு வேளையில் சில நபர்களால் ஆற்றுவாய் வெட்டப்பட்டதால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் இருந்து வந்த சிலரால் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் மட்டக்களப்பில் ஆற்றுவாய் வெட்டப்பட்ட போது பாலன் மீன்மடு பிரதேச மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர், இதன்போது முகத்துவாரத்தினை வெட்டியோருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
சம்பவம் அறிந்து மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் ஆகியோர் அவ் இடத்திற்கு விஜயம் செய்தனர்.
குறித்த சட்ட மீறல் செயற்பாடு தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஆற்றுவாய் வெட்டியோருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்து மீறி மட்டக்களப்பில் மாற்று இனத்தவர் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் முகத்துவாரத்தினை வெட்டியது மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் சினத்தினை உண்டுபண்ணியுள்ளதுடன். ஒற்றுமையை சீர் குலைக்கும் செயலாகவும் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

