அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை பேராசிரியர் லலிதஶ்ரீ குணருவனின் தலைமையிலான குழுவினால் இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை நேற்று புதன்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது MCC உடன்படிக்கை தொடர்பில் 6 மாதங்களாக ஆய்வு செய்துள்ளது.
அத்துடன், பல்வேறு துறையினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சிபார்சுகள் அடங்கிய குழுவின் இந்த அறிக்கை பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

