சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
காலி – பலப்பிட்டிய தொகுதியில் போட்டியிடும் டெனட் பனியன்தூவகே இவ்வாறு விளக்கியுள்ளார். இது குறித்து அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பலப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தனது முடிவு குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியோருக்கு தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

