கொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் காசாளர் ஒருவரிடம் பொம்மை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 லட்சத்திற்கும் அதிகளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தேசிய மருத்துவமனையின் பண்டாரநாயக்க கட்டடத்தில் உள்ள பண வைப்பு பெட்டக பகுதிக்கு பிரவேசித்த குறித்த வைத்தியர், மருத்துவமனையின் பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு, வேதனம் என்பவற்றுக்காக செலுத்தப்படவிருந்த பணத்தினை இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் முச்சக்கரவண்டியொன்றில் அவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான வைத்தியர் ஹொரணை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

