ஜனநாயத்தின் பெரியண்ணன் என மார்பு தட்டும் அமெரிக்காவில் பொலிஸாரின் வன்முறைக்கு பலியாகிய ஆப்ரிக்க அமெரிக்கர்க்காக உலகம் முழுவதும் கண்ணீர் வடிப்பது நிஜமானது தான்.
ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் தினம் தினம் இதனைத்தானே கடந்து போகின்றோம்.
இலங்கையில் வன்னியில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகியபோது எல்லோரும் மெளனமாக இருந்தார்களே ?
இனவுணர்வாளர்களும் ஆர்ப்பாட்டகாரர்களும் எங்கே போனார்களோ ?ஈழத்தமிழனின் குருதி ஓடுகையில் ஏன் புலம்பெயர்தமிழர்களின் குருதிகூட கொதிக்கவில்லை ?


