Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அம்பாறையில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நோய் தாக்கம்

June 1, 2020
in News, Politics, World
0

அம்பாறை மாவட்டத்தில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் வருவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும் மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் பல ஆண்டுகளாக டெங்கு நோய் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் ஒன்றாக காணப்படுகின்றது. தற்போதைய நிலையிலும் டெங்கு தாக்கம் நமது கல்முனைப் பிராந்தியத்தில் காணப்படுகின்றது. கொவிட்-19 தொற்று காலத்தில் சுகாதார திணைக்களம் உத்தியோகத்தர்களும் தொற்று நோய்க்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் சமகாலத்தில் ஏனைய நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் சற்று தொய்வு நிலையில் ஏற்பட்டுள்ள நிலையில் மிகுந்த உத்வேகத்துடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

ஐரிஸ் நுளம்பின் மூலம் கடத்தப்படும் டெங்கு நோயானது கடந்த வருடம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டார்கள். எமது கல்முனைப் பிராந்தியத்தின் பொறுத்தளவில் 480 நோயாளிகள் முதல் ஐந்து மாத பகுதியில் இனங்காணப்பட்டார்கள் ஆனால் இந்த வருடம் ஐந்து மாதங்களுக்குள் நோயாளர்களின் எண்ணிக்கை 840 ஆக இரட்டிப்பு நிலையாக அதிகரித்துள்ளது. இதற்கு பல வேறுபட்ட காரணங்கள் எதுவாக அமைந்தாலும் இந்தப் பயங்கரமான நிலையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பமாக கருதவேண்டியுள்ளது.

உண்மையில் காலநிலை மாற்றம் பருவப் பெயர்ச்சி மழை உள்ள மாற்றநிலை டெங்கு நோய் பரவலுக்கு காரணமாக இருந்தாலும் நோய் தாக்கக்கூடிய நுளம்பின் பெருக்கமும் இரண்டு மூன்று மடங்குக்கு மேலாக உள்ளது இது ஒரு அபாய நிலையாகும்.தற்போதைய இறுக்கமான சூழ்நிலையில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்குபொதுமக்கள் முன்வர வேண்டும். டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை அடையாளம் காண்பதும் அவர்களை அழித்து விடுவதுதான் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான மிகப் பிரதான பொறி முறையாக உள்ளது.

ஆகவே தற்காலிக கொள்கலன்கள் இருந்து வகைப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இ சிரட்டைஇ பொலித்தீன் பைகள்இடயர்கள் குப்பைகள் போன்றவற்றை சரியாக அகற்றிவிட வேண்டும் அத்துடன் கிணறுகள் நீர்த் தாங்கிகள் போன்றவற்றிற்கு வலைகளை பயன்படுத்தி மூடிவிடவேண்டும்.நீர் தேங்க கூடிய குட்டைகள் மரப் பொந்துகள் என்பவற்றை அடைத்துவிட வேண்டும். ஆகவே மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும் மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது.

தற்போதும் மாலை வேளைகளில் குறைந்தளவு மழைவீழ்ச்சி எமது பிராந்தியத்தில் காணப்படுகின்றது மிகக் குறைந்த நீரில் டெங்கு நோய் பரவக்கூடிய நுளம்புகள் பெருகுவதால் இந்த நிலைமைதான் மிகவும் பிரச்சினைக்கு உரியதாக காணப்படுகின்றது. சுகாதார துறையினர் கிணற்றுக்குள் மீன்குஞ்சுகளை வழங்கி நுளம்பு பெருகக்கூடிய இடங்களில் புகைகளை விசிறி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆட்கொல்லி நோய்க்கு பொதுமக்களின் பங்களிப்பு மிகப் பிரதானமானது கல்முனை பிராந்தியத்திற்கு மாத்திரமில்லை முழுநாட்டுக்குமே பாதுகாப்பாக அமையும்.

கல்முனை பிராந்தியத்தை பொறுத்தளவில் அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ,கல்முனை வடக்கு பிரதேசம், பொத்துவில் பிரதேசம் ,ஆகியவற்றில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும் ஏனைய பகுதிகளிலும் தற்போது டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளும் இனங்காணப்பட்டுள்ளனர் . கடந்த ஒரு சில மாதங்களுக்குள் கர்ப்பிணி தாய் உட்பட இருவர் தங்கள் தாக்கத்தின் காரணமாக மரணமடைந்துள்ளனர கடந்த வருடத்தில் எந்தவிதமான மரணங்களும்இப் பிராந்தியத்தில் டெங்கு நோய் தாக்கத்தின் காரணமாக இடம்பெறவில்லை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போதும் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் இந்த வருடத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது என்றார்.

Previous Post

சேவையில் ஈடுபடுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்பு!

Next Post

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

Next Post

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures