வண்ணத் தோகைகள், இதய வடிவத்தில் காணப்படும் மார்பு, தரையைத் தொடும் இறக்கைகள் என ராஜநடைபோடும் எல்சா, அலங்காரக் கோழி வகைகளின் பொதுப் பிரிவில், இவ்வாண்டுக்கான ஆக அழகான கோழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோழிகளுக்கான அழகிப்போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது புருணையைச் சேர்ந்த எல்சா எனும் கோழி. சாபாவில் உள்ள கோத்தா கினபாலுவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இம்ரான் பின் ஹாஜி காமிட் என்பவரது கோழியான எல்சா, பொதுப் பிரிவில் முதல் பரிசை வென்றுள்ளது.
அலங்காரக் கோழிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் என்ரான் வளர்த்த நிமோ எனும் கோழி இளையர் ‘பி’ பிரிவில் இரண்டாமிடத்தையும் பம்ப்லிபீ எனும் கோழி ‘ஏ’ பிரிவில் நான்காமிடத்தையும் பிடித்து அவரது மகிழ்ச்சியைப் பலமடங்காக்கியுள்ளன.பொதுப்பிரிவில் எல்சாவுடன் சேர்த்து மொத்தம் 98 கோழிகள் போட்டியிட்டன.மலேசியா, ஜப்பான் இனக் கோழிகளின் இரண்டின் கலப்பின வகையைச் சேர்ந்தது எல்சா என்று கூறப்பட்டது.

