Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

90 இலட்சம் ரூபாய் மதிப்பில் கச்சதீவு திருவிழா 

February 18, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கச்சதீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியிருத்தல் அவசியம் – யாழ். அரச அதிபர்

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு உத்தேச செலவீனமாக 90 இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 

இம்முறை பயணிகளிடம் ஒருவழி படகுப் பயண கட்டணமாக 1,500 ரூபாய் பணம் அறவிடப்படவுள்ளதாகவும் யாத்திரிகர்கள் இம்முறை தமக்கு தேவையான உணவை தாமே கொண்டுவர வேண்டும் என்பதாகவும் பல்வேறு அறிவுறுத்தல்கள் யாழ். மாவட்ட செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

மேலும், இந்திய துணைத்தூதரகம் நிதி பங்களிப்புக்களை வழங்கி வந்த நிலையில், அதைப் பற்றி இம்முறை தூதரகம் இதுவரையில் எந்தவொரு தகவலையும் எமக்கு அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார். 

கச்சதீவு திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதனை கண்டித்தும், அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இராமேஸ்வர மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

Previous Post

வடக்கு – கிழக்கு தமிழர்கள் தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன..! ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி

Next Post

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமானது – பிரதமர்

Next Post
ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட ஒருபோதும் இடமளியோம் | தினேஷ் குணவர்தன

அரசியல்வாதிகளுக்கும் பாரிய வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் பாரதூரமானது - பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures