அமெரிக்காவில் மகாத்மா காந்தி கடந்த 1924ம் ஆண்டு கையெழுத்திட்ட தபால் அட்டை 13 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போனது. மகாத்மா காந்தி அன்னிபெசன்ட் அம்மையாருக்கு தபால் அட்டையில் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 1924ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் இரண்டு பக்கத்திலும் “எம்.கே.காந்தி” என கையெழுத்திடப்பட்டு உள்ளது.
இந்த கடிதத்தில் காந்தி ‘உங்கள் கடிதத்திற்கு நன்றி. எனது மகன் தேவதாஸ் இன்று இரவு புறப்படுகிறான். அவனது செலவுகள் குறித்து கவலைப்படாமல் இருக்க பிரார்த்திக்கிறேன். உங்களின் விருந்தினராகும் கவுரவத்தை அவன் பெற்றுள்ளான். ஜம்னதாஸ் நீங்கள் அளித்த கதர் துண்டுகளை கொடுத்தான். அதை பொக்கிஷமாக கருதுகிறேன். அதன் நூற்பு அருமையாக உள்ளது’ என்று எழுதியுள்ளார். இந்த கடிதம் அமெரிக்காவை சேர்ந்த ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வைக்கப்பட்டது. இந்த ஏலம் கடந்த 13ம் தேதி முடிந்தது. காந்தி கையொப்பமிட்ட இந்த கடிதம், 13 லட்சத்து 76 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

