80 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கப் பாளங்களை, பிஸ்கட் பொதிகளில் மறைத்து இலங்கைக்கு கடத்திவர முயற்சித்த ஃபரான்ஸ் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைதானார்.
அவர் தமது பயணப்பொதியில் பிஸ்கட் பக்கெற்றுக்குள் குறித்த தங்கப்பாளங்களை மறைத்து கொண்டுவந்துள்ளார்.
ஓமானில் இருந்து வந்த விமானம் ஒன்றில் அவர் இலங்கையை வந்தடைந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

