Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

8 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிராக 7,523 குற்றச் சம்பவங்கள் பதிவு

October 30, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துச் செல்கின்றன. இது குறித்து உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பிலிருந்தும் அவசர கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 168 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பான தகவல்கள்  கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தேசிய சிறுவர் அதிகார சபையின் புள்ளி விபரங்களின் படி 2021 ஆம் ஆண்டு நாட்டில்  சிறுவர்களுக்கு எதிராக 11 ஆயிரம் குற்றச்சம்பவங்கள்  இடம்பெற்றுள்ளன. 

அதேவேளை 2022 ஆம் ஆண்டு பதிவாகியுள்ள மொத்த துஷ்பிரேயோக வழக்குகளில் 41 வீதமானது சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளாகும்.

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையான துஷ்பிரயோக சம்பவங்களை பார்க்கும் போது இவ்வருடம் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்கள் வரை இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையானது, சிறுவர் துஷ்பிரயோங்கள் தொடர்பில் அலட்சியப்படுத்தல்கள் தொடர்கின்றன என சுட்டிக்காட்டுகின்றது. 

அதன்படி முதல் எட்டு மாதங்களில் சிறுவர்களுக்கு எதிராக 7,523 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுக்கு அப்பாற்பட்டு 4,000 முறைப்பாடுகள் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருடத்தில் மார்ச் மாதமே அதிக  துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.  அந்த மாதம்    1,176 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  இக்காலப்பகுதியில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகங்களாக 273 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் சிறுவர்கள் பாலியல் சேஷ்டைகளுக்குட்படுத்திய சம்பவங்கள் 309 ஆக பதிவாகியுள்ளன.

சிறுவர்களை மிக மோசமாக தாக்கிய சம்பவங்கள் 1,481 ஆக பதிவாகியுள்ளன. கட்டாய கல்விக்குட்படுத்திய துஷ்பிரயோகங்கள் 1,206 ஆக உள்ளன.

கொழும்பு மாவட்டத்திலேயே சிறுவர்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன. முதல் எட்டு மாதங்களில் இங்கு 830 சம்பவங்கள் முறைப்பாடுகளாக பதிவாகியுள்ளன. 

இந்த முறைப்பாடுகளில் சிறுவர்கள் மீது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தவர்களில் , ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் இனம் தெரியாதவர்களுடன் பெளத்த பிக்குகளும் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Previous Post

தென்னிலங்கையில் காணாமல் போனவர்களுக்கு ரத்தொலுவையில் நினைவுகூரல்

Next Post

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Next Post
சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி புத்தளத்தில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures