இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதியும் அவரது பாரியாரும் விசேட அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்குத் தேவையான சகல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

