தலைமன்னார் ஊடாக இந்தியாவிற்கு கடத்தப்பட இருந்த சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன் 2 சந்தேக நபர்களை கடற்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மாலை கைது செய்துள்ளனர்.
-கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் இருந்தும் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான 120 தங்க பிஸ்கட் கட்டிகளைக் கொண்ட 12 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த இரு நபர்களும் தங்கத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை(28) மாலை தலைமன்னார் கிராமம் கடற்பகுதியில் இருந்து இந்தியாவிற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்ல முற்பட்ட போதே கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட 12 கிலோ தங்கம் ஆகியவை யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.