இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினரான பிரித்தானியாவின் இளவரசர் எட்வேர்ட் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. காலிமுகத் திடலில் சுதந்திர நாள் பிரதான அணிவகுப்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக, பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் ஆகியோரின் இளைய மகளான இளவரசர் எட்வேர்ட் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக இளவரசர் எட்வேர்ட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.