70வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சலுறையும் வெளியீடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினதும் தபால் திணைக்களத்தினதும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதனிடையே ஒலிம்பிக் பதக்கம்பெற்ற இலங்கையின் முதலாவது விளையாட்டு வீரரான டங்கன் வைட் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தையொட்டிய விசேட முதல்நாள் தபாலுறையும் இதன்போது வெளியிடப்பட்டது.
விளையாட்டு வீர்ரான டங்கன் வைட் அவர்களின் நூறாவது பிறந்த நாள் மார்ச் முதலாம் திகதியாகும்.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜயந்த விஜேரத்ன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினதும் தபால் திணைக்களத்தினதும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.