7 பேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இந் த நிலையில், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவல் தவறு என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘7 பேர் விடுதலை விவகாரம் குறித்து அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியே ஆக வேண்டும். தமிழர்களின் எதிர்பார்ப்பை ஆளுநர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுனர் ஒப்புதல் வழங்கித்தான் தீரவேண்டும் என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

