ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலக பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமாக ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 1,700 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

