சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் வெயாங்கொட, உடுக்கம்பல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்,
பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 73 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் பெறுமதி 7 இலட்சத்து 30,000 ரூபா அளவில் இருக்கும் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெயாங்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.