Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

November 14, 2018
in News, Politics, World
0

திருகோணமலை சிறிமாபுர விகாரைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண்ணொருவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் (நேற்று 13 ஆம் திகதி மாலை) ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் திருகோணமலை, மகாமாயபுர பகுதியைச் சேர்ந்த பி. எச்.இனோகாநில்மினி (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது 2018 மே மாதம் 11ஆம் திகதி காலை 5.50 மணியளவில் விகாரைக்கு அருகில் உள்ள சந்தியில் அதே பகுதியை சேர்ந்த கே. விதானகே செலின் குமார (40 வயது) என்பவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய நிலையில் மரணம் விளைவித்தமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் திருகோணமலையில் கப்பம் பெற்ற மூன்று குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெண் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஈரானில் நடைபெறும் சர்வதேச கருத்தரங்கில் 80க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்க முடிவு

Next Post

கிருஸ்ணராக மாறிய முன்னாள் அமைச்சர்!

Next Post

கிருஸ்ணராக மாறிய முன்னாள் அமைச்சர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures