66 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான ஈரான் விமான விபத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் பழமையான விமான நிறுவனம் ஆகும். ஆனால் விமான நிறுவனம் மட்டுமல்ல அதன் விமானங்களும் மிகப்பழமையானவை என்னும் உண்மை தற்போது வெளிவந்துள்ளது.
உலகின் மோசமான விமான சேவையைக் கொண்டுள்ள நாடு என்று ஈரான் பெயரெடுத்துள்ளதுதான் காரணம், 1979 முதல், ஞாயிறன்று ஏற்பட்ட விமான விபத்து வரை இதுவரையில் சுமார் 1700 விமானப்பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன என ஆராய்ந்தால் வெளி வரும் உண்மைகள் யார் மீது குற்றம் சுமத்துவது என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
காரணம் ஈரான் விமானங்களின் நிலைமை மிக மோசமானதாக உள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் காரணமாக எந்த நாடும் அதற்கு விமானங்களை விற்பனை செய்ய முன் வராத காரணத்தால் அந்நாடு மிகப்பழைய விமானங்களையே பயன்படுத்தி வருகிறது.விமானங்கள் மிகப்பழமையானதாக இருப்பதாலேயே அவை அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன என்னும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தனது அணு ஆயுத திட்டங்களை மட்டுப்படுத்திக்கொள்வதாக ஈரான் உறுதியளித்ததையடுத்து 2016ஆம் ஆண்டு பல சர்வதேச தடைகள் நீக்கப்பட்ட நிலையில் அமெரிக்க விமான நிறுவனமான போயிங்கும் அதன் ஐரோப்பிய போட்டியாளரான ஏர்பஸ்சும் ஈரானுக்கு பல விமானங்களை விற்க முன் வந்துள்ளன.
ஆனாலும் டிரம்ப் நிர்வாகம், அந்த விமானங்கள் ஈரானின் ராணுவத்தால் பயன்படுத்தப்படலாம் என்று கூறி அந்த விற்பனைகளை தடுக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விமானப்பயணம் தொடர்பாக இரண்டு விமானப் பயணிகள் வெளியிட்ட செய்திகள் வைரலாகி வருகின்றன.
அதில் ஒருவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் விமானத்தின் புரொப்பெல்லர் இருந்த மோசமான நிலையைப் பார்த்து அதைத் தன் தோழிக்கு படம் எடுத்து அனுப்பி விட்டு “பத்திரமாக வீடு போய்ச் சேர ஆண்டவன்தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று செய்தியும் அனுப்பியுள்ளார். அவர் அஞ்சியது போலவே நடந்து விட்டது சோகத்திலும் சோகம்.இன்னொரு பயணியின் செய்தியோ ஒரு பக்கம் மகிழ்ச்சியையும் மற்றொரு பக்கம் துயரத்தையும் வெளிப்படுத்துகிறது.
அந்த விமானத்தில் சென்றிருக்கவேண்டிய அவர் விமானத்தைத் தவற விட்டு விட்டார், அதனால் அவர் இன்று உயிருடன் இருக்கிறார். கடவுள் உண்மையாகவே என் மீது கருணை
கொண்டுள்ளார் என்று தெரிவிக்கும் அவர், உயிரிழந்த அனைவருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வேதனையுடன் கூறுகிறார்.