போதை ஏற்படுவதற்காக இளைஞர்கள் பயன்படுத்தும் 600 போதை மருந்துகளை வைத்திருந்த இருவர் இன்று இரானி சந்தியில் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர்.
கெக்கிராவை மற்றும் பதுளை பகுதிகளை சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு சந்தேக நபர்களும் இராணி சந்தியில் தற்காலிக கடை ஒன்றில் ஆடை தைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் ஆடை தைப்பு தொழிலுக்கு மேலதிகமாக போதைப்பொருட்களை தூர பகுதிகளிலிருந்து கொண்டு வந்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.