Saturday, August 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

April 30, 2016
in News
0

கனடா வரலாற்றில் இசை என்னும் பரிணாமத்தில் “இசை எம்பயர்” ஒரு திருப்புமுனை! கனடாவில் முழுமையாக கனேடிய இளம் இசை தேர்ச்சி பெற்ற தலைமுறையினரை உள்வாங்கி நடத்தப்பட்ட மாபெரும் இசை நடனத் திருவிழா! மண்டபம் நிரம்பி வழிந்த ரசிகர்கள் கூட்டம்! தாராளமாக சுவையான உணவுகளுடன் பல்வேறுவகையான கேக் வகைகளையும் வழங்கி இசை எம்பயர் நிறுவனம் மக்களின் மனதில் நிலையானது! ராம் அகராதியின் நடனக்குழுவினர் அசத்தலாக பாடல்களுக்கு மட்டுமன்றி வித்தியாசமான நடனங்களை வழங்கி ரசிகர்களை இன்பம் கலந்த சந்தோசத்தில் மூழ்க வைத்தனர். நிகழ்சிகள் வாழ்த்துபாடல்கள் மற்றும் அகவணக்கம் செல்லுத்தப்பட்டதன் பின்னராக மங்கள விளக்கேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. வாழ்த்துப்பாடல்களை ஐஸ்வர்யா சந்துரு அவர்கள் தங்களது இனிமையான குரலில் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து நடனங்கள், பாடல்கள் என சுவாரசியமாக நிகழ்சிகள் அசத்தலாக நகர்ந்து சென்றது. நிகழ்சிகள் துவங்கி சற்று நேரத்தில் மண்டபம் நிறைந்த ரசிகர்கள் கூடினார்கள். நிகழ்ச்சி துவங்கி முடியும்வரை ரசிகர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் கூட அசையாமல் வைத்திருந்த பெருமை இசை எம்பயருக்கே சாரும். இசையை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புடன் “இசை எம்பயர்” என்ற இசை சார்ந்த கம்பனியினை உருவாக்கி புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களுடன் சர்வதேசரீதியில் உள்ள கலைனர்களையும் உள்வாங்கி எதிர்காலங்களில் பல்வேறுவிதமான இசை நிகழ்சிகளை இசைப்பிரியர்களுக்கு வழங்கும் நோக்குடனும் கனேடிய பாடகர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்குரிய ஒரு அடையாளத்தினை உருவாக்கும் நோக்குடனேயே திரு. திருமதி பரமநாதன் அவர்களின் பிள்ளைகள் பிரதாயினி பரமநாதன் மற்றும் விதுஷாயினி பரமநாதன் ஆகியோரின் விடா முயற்சியினாலேயே “இசை எம்பயர்” என்ற அமைப்பு ஆரம்பமானது. பிரதாயினி பரமநாதன் மற்றும் விதுஷாயினி பரமநாதன் ஆகியோர் கல்வியில் சிறப்பு தேர்ச்சிபெற்று சாதனைகளை சாதித்துவரும் இசைவல்லுனர்கள். ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர்கள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். பிரதாயினி அவர்கள் மருத்துவ துறையில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஓர் சிறந்த பட்டதாரியாக திகழ்ந்துவருவதனை நாம் அறிவோம். பல்வேறு சமூகம் சார்ந்த துறைகளில் பல ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை செயல்வடிவில் நடாத்தி பலவிருதுகளை பெற்று சமூகத்தில் பல பாராடுதல்களை பெற்றுக்கொண்டவர்கள். அதேபோல அவர்களின் சகோதரி விதுஷாயினி பரமநாதன் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுபோல இசையில் ஓர் தமிழரசியாக திகழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பல பாடல்களை நான் கேட்டு ரசித்ததுண்டு. காதிற்கு இனிமை சேர்க்கும் இனிமையான ராகங்கள் சொரியும் ஒரு இளம்தென்றல். அவர்களின் பாடல்களின் வார்த்தைகளினால் கிடைக்கும் சுகத்தில் இனிமை கலந்த சந்தோசத்துடன் கூடிய மகிழ்ச்சி பொங்கும். இவ்வாறாக இந்த இரண்டு பெண் சகோதரிகளும் சேர்ந்தே கனடாவின் இன்றைய மிகப்பெரிய கலைனர்களை உள்வாங்கிய “இசை எம்பயர்” என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாகவும் ஆரம்பகர்த்தாக்களாகவும் இருந்துவருவதுடன், அவர்கள் இசை மீது கொண்டுள்ள ஆர்வத்தினையும், தமிழர்களின் இசையுடன் கூடிய கவின் கலைகளை பாதுகாப்பதில் எவ்வளவு தூரம் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்பதினை பறைசாற்றுகின்றது. இசை எம்பயர் என்ற நிறுவனத்தின் முதலாவது இசையுடன் கூடிய “இசை நடனத்திருவிழா”. பல சிறு வயது நிரம்பிய மாணவர்கள் தங்களது திறமையான குரலில் பழைய புதிய பாடல்கள் என அசத்தலாக பாடி எல்லோரையும் வியப்புறும்படி ரசிக்க வைத்தனர். குறிப்பாக ஏ ஆர் ரகுமான் பாடிய பாடல்களினை மிகவும் சிறப்பாக பாடி எல்லோரையும் சந்தோசம் கலந்த ஓர் இனிய இரவாக வழிவகை செய்தனர். இசை எம்பயரின் இசை நிகழ்வுகள் சிறப்பாக நகர்ந்து சென்றவேளை விதுஷாயினி பரமநாதன் அவர்கள் மேடையில் வந்தபோது மண்டபம் நிறைந்த ரசிகர்களின் கூட்டம் பலத்த கரகோஷம் செய்து அவர்களை வரவேற்றனர். அவர்கள் மிகவும் சிறப்பாக வாகை சூடவா என்ற திரைப்பாடத்தில் “போறானே போறானே காத்தோட தூத்தல போல, போறானே போறானே போவாம தான் போறானே” என்ற பாடலினை பாடி எல்லோரையும் மகிழ வைத்தார்கள். மிகவும் சிறுவயது நிரம்பிய சிறார்கள் மிகவும் சிறப்பாக பாடல்களினை பாட வைத்த பெருமை இசை எம்பயருக்கே சாரும். மேலாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிகா அவர்கள் மிகவும் சிறப்பாக “மழையே மழை” என்ற பாடலினை பாடி எல்லோரையும் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை வரவழைக்கவைத்தார்கள். விழாவின் சிறப்பம்சமாக ஏராளமான பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வியாபார தொழில் அதிபர்கள் கலந்துகொண்டு உள்ளூர்கலைஞர்களை ஊக்குவித்தனர். ஒட்டு மொத்தமாக ஒரு சிறப்பான விழா என்ற நான் கருதுகின்றேன். ஆடல், பாடல், சுவையான உணவு, சிறப்பான சந்திப்பு என எல்லாம் சேர்ந்த ஒரு களியாட்டத் திருவிழாவாக இசை எம்பயர் என்ற இசை நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சியினை பெருந்தொகை பணம் செலவு செய்து மிகவும் சிறப்பாக கனேடிய சிறந்த பாடகர்களை குறிப்பாக சிறார்களை உள்வாங்கி அவர்களுக்கு தேவையான பயிற்சியினை வழங்கி கனேடிய சமூகத்தினருக்கு மட்டுமின்றி உலகத் தமிழர்களுக்கு எமது உள்ளூர்களைஞர்களின் திறமைகளை வெளிக்கொனர்வதற்கு உந்துசக்தியாக இருந்த திரு திருமதி பரமநாதன் அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகள் பிரதாயினி பரமநாதன் மற்றும் விதுஷாயினி பரமநாதன் ஆகியோருக்கு உலகத் தமிழர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு மென்மேலும் அவர்களின் இசைப்பயணம் பலவழிகளிலும் சிறகடித்து பறக்க வேண்டுமெனவும் அடுத்த ஆண்டு “இசை எம்பயர்” இரண்டாம் வருட நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெற வேண்டுமனவும் வாழ்த்தி விடை பெறுகின்றேன்.

Langes, FCPA, FCGA
easy24news.com
EasyNews Latestnews
Tamilbc.ca
Langes Lingam
Vithusayni Paramanathan
Queenie Param
Ponn Parammusic

Previous Post

உதித்தது வண்ணத் தமிழ் வானொலி

Next Post

ரஜனிகாந்த் கபாலி பாருங்கள் இங்கே

Next Post

ரஜனிகாந்த் கபாலி பாருங்கள் இங்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures