நிக்கவெரட்டிய பிரதேசத்தில் போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிக்கவெரட்டிய நகரில் அமைந்துள்ள அரசாங்க வங்கியொன்றில் பண வைப்புச் செய்ய வந்த நபர் ஒருவர் வழங்கிய நாணயத் தாள் போலியானது என, நிக்கவெரட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 5,000 ரூபா போலி நாணயத்தாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஆந்தாவத்தை, லுணுகல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

