நடுக்கடலில் பயணிகளுடன் மாயமான படகில் இருந்த 7 பேரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டனர்.மத்திய பசிபிக் கடலில் உள்ள தீவு கிரிபட்டி. தனிநாடான இதற்கு
சொந்தமான எம்.வி. புட்டிராவோய் என்ற படகு 50 பேருடன் சென்றபோது நடுக்கடலில் கடந்த வாரம் மாயமானது.
இதையடுத்து அருகில் உள்ள பெரிய நாடுகளான நியூசிலாந்து, பிஜி
ஆகியவையும் தேடும் பணியில் இறங்கின.நியூசிலாந்தின் விமானப்படை, வான்வழி தேடுதலில் இறங்கியது.
இதில் மாயமான படகு பசிபிக் தீவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டடது. அதில் 7 பேர் உயிருடன் இருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உதவிகளை
நியூசிலாந்து விமானப்படை செய்து வருகிறது.நியூசிலாந்து விமானப்படை அதிகாரி டேரின் வெப் கூறும்போது, ”மாயமான படகை, எங்களின் பி-3கே2 வகை ஆரியன் விமானம் கண்டுபிடித்துள்ளது.
படகில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.அந்தப் படகில் பயணம் செய்த எஞ்சிய 47 பேர் பற்றி எந்த தகவலும் இல்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.