அனுமதிப் பத்திரமின்றி சுண்ணாம்புக் கற்கள் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரச் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் இன்று 50 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸாரால் சாலைப் போக்குவரத்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் சரசாலை கனகன்புளியடிச் சந்தியூடாக சுண்ணாம்புக் கற்கள் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை தடுத்து சோதனையிட்டபோது அனுமதிப் பத்திரமின்றி ஏற்றியமை கண்டுபிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கச்சாயைச் சேர்ந்த சாரதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிவான் சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து அனுமதிப் பத்திரமின்றி ஏற்றி வந்த கற்களை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.
