Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

5 மாவட்டத்திற்கும் தேவையான கனிய வளங்களை பெறுவதற்கான கூட்டு முயற்சி

November 22, 2017
in News, Politics
0

கனியவளத் திணைக்களம் , புவிச்சரிதவியல் திணைக்களங்களின் அலுவலகம் வடக்கில் அமைப்பதோடு வடக்கில் மணல் தட்டுப்பாட்டினை கருத்தில்கொண்டு 5 மாவட்டத்திற்கும் தேவையான கனிய வளங்களை பெறுவதற்கான கூட்டு முயற்சியாக 5 மாவட்ட அரச அதிபர்களையும் அழைத்து விரைவில் ஆராய்து ஓர் முடிவினை எட்டுவது என யூலை 31 ம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் தலமையிலான கூட்டத்தில் முடிவெடுத்த நிலையில் இன்றுவரை எந்த முன்னேற்றமும் கிடையாது என கட்டுமான தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் உள்ள தடங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் கடந்த யூலை 31ம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர , யாழ். மாவட்டச் செயலாளர. நா.வேதநாயகன் ஆகியோரின் தலமையில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கில் மணல் விநியோகத்துடன் தொடர்புடைய திணைக்களங்களின் கட்டுப்பாட்டு அலுவலகங்கள் வட மாகாணத்தில் இல்லாதமையே பாரிய பிரச்சணையாகவுள்ளதால் இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் கவனம் செலுத்தி
குறிப்பாக கனியவளத் திணைக்களம் , புவிச்சரிதவியல் திணைக்களங்களின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அநுராதபுரத்தில் உள்ளனர். இதனால் இவர்கள் அந்த மாகாண அதிகாரிகளின் சொல்லின் கீழ் இயங்குகும் நிலமையே கானப்படுவதோடு இவர்களிற்கு இப்பிரதேச நிலமையும் முழுமையாக தெரிவதில்லை எனவும் வடக்கில் மணல் தட்டுப்பாட்டினை வைத்து பலரும் பல விலைகளில் விற்பனை செய்து அநாவசிய பிரச்சணைகள் எழுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றின் அடிப்படையில் வடக்கின் 5 மாவட்டத்திற்கும் தேவையான கனிய வளங்களை பெறுவதற்கான கூட்டு முயற்சியாக 5 மாவட்ட அரச அதிபர்களையும் அழைத்து விரைவில் ஆராய்து ஓர் முடிவினை எட்டுவது .

அதேபோன்று 5 மாவட்டத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையை தீர்மானித்து அந்த விலையிலேயே பொருளை வழங்குவது. மாகாணத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னுமோர் மாவட்டத்திற்கு கொண்டுபோக முடியாத சூழலில் மாகாணத்திற்கு வெளியில் கொண்டு செல்லப்படுவது தொடர்பில் ஆராய்வது. கனியவளங்களிற்கான அனுமதியை வழங்கும் அலுவலகம் அல்லது குறைந்த பட்சம் அதிகாரி வடக்கில் இயங்க ஆவண செய்வது போன்ற தீர்மானங்களை மேற்கொண்டனர்.

இவ்வாறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு 110 நாட்கள் மட்டும் கடந்துவிட்ட நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் கானப்படவில்லை எனவும் வடக்கின் சகல மாவட்டத்திலும் இன்றுவரை மணல் விநியோகமும் கிரவல் விநியோகமும் ஓர் பாரிய பிரச்சணையாகவே கானப்படுகின்றது. இது தொடர்பான ஆக்கபூர்வமான பணிகள் இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை யூலை மாதம் 31ம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில்
மேலதி அரசாங்க அதிபர் காணி , பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிசாருடன் , கனியவளத் திணைக்கள அதிகாரிகள் , புவிச்சரிதவியல் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

இன்று இரவு நான் செம ஹேப்பி

Next Post

ஆரம்ப பாடசாலைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை – அகிலவிராஜ்

Next Post
ஆரம்ப பாடசாலைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை – அகிலவிராஜ்

ஆரம்ப பாடசாலைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை – அகிலவிராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures