சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ரஷ்ய படை அறிவித்திருந்த 5 மணிநேர போர் நிறுத்த இடைவெளியை மீறி தாக்குதல் நடைபெற்று வருவதால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கவுட்டா நகரில் மனித நேய உதவி வழங்குவதற்காக தாங்கள் உருவாக்கிய பாதையை பயன்படுத்த முடியாதப்படி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. கிளர்ச்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கையால் பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை உள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா வெளியறவுத்துறை அமைச்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள கிளர்ச்சியாளர்கள் சிரிய அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான அரசு படை நடத்திய வான்வழித் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்காக அனைத்து தரப்பினரும் ஒருமாதம் போர் நிறுத்தம் செய்யுமாறு ஐ.நா.சபை தொடர்ந்து வலியுறுத்தியதால் தினமும் 5 மணிநேரம் போர் நிறுத்த இடைவெளி வழங்குவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.