Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

5 நாட்களில் மாத்திரம் 2 ஆயிரம் பேர் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பினர்!

April 26, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பல்வேறு காரணங்களுக்காக வருகை தந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தங்களுடைய சொந்த மாவட்டங்களுக்கு விரும்புவதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 5 நாட்களில் மாத்திரம் 2 ஆயிரம் பேர் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“கடந்த 20ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையில் பிற மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களே அனுப்பப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக சிலர் அனுப்பப்படவுள்ளனர்.

அதேவேளை, அதி இடர் வலயமாக கருதப்படும் மாவட்டங்களுக்குச் செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதைய நிலையில் அனுப்பப்பட மாட்டார்கள்” – என்றார்.

Previous Post

இலங்கையில் கொரோனோ 452!

Next Post

பாடசாலைகள் திறப்பதையும் பரீட்சைகளையும் ஒத்திவைக்கவும் – அமைச்சர்களிடம் மாவை. எம்.பி. கோரிக்கை

Next Post

பாடசாலைகள் திறப்பதையும் பரீட்சைகளையும் ஒத்திவைக்கவும் - அமைச்சர்களிடம் மாவை. எம்.பி. கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures