சிறு போகத்தில் விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக் கூடியது 5 ஆயிரம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
அரிசிக்காக நியாயமான சந்தை விலையொன்றை முன்னெடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நுக் வோருக்கும் உதவி வழங்கும் நோக்கிலேயே இந்தச் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் அபிவிருத்தி மூலலோபய மற்றும் பன்னாட்டு வர்த்தக அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த ஆவ ணத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது