தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) இணைய வேண்டும் என்று சமூகவலைத் தளங்களில் நேற்றுப் பெரும்பாலானோர் பதிவிட்டனர்.
வெளியான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், வடக்கில் 32 சபைகளில் தொங்கு நிலமை ஏற்பட்டுள்ளது.
இந்த உள்ளூராட்சி மன்றங்கள் பெரும்பாலானவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும்
இணைவதன் ஊடாக ஆட்சி அமைக்க முடியும்.
இந்தக் கருத்தை வலியுறுத்தி சமூகவலைத் தளங்களில் பெருமளவான இளையோர் பதிவிட்டிருந்தனர். இரண்டு கட்சிகளும் இணைவது காலத்தின் தேவை என்றும் அவர்கள் அதில் வலியுறுத்தியிருந்தனர்.