Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

4 வயது மகளுக்கு சிறுநீரக பாதிப்பென பொய் கூறி யாழில் யாசகம் பெற்ற காத்தான்குடி வாசிக்கு விளக்கமறியல்

May 16, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும்  என பொய் கூறி  யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்களுக்கு பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான சிகிச்சைக்கு பண உதவி செய்யுமாறு கோரி ஒருவர் யாசகம் பெற்றுள்ளார். 

யாழில் நிலவும் கடுமையான வெப்பமான காலநிலையில் , வெயிலுக்குள் சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி வைத்து ஒருவர் யாசகம் பெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுமியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் , யாசகம் பெற்ற நபரையும் கைது செய்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் சிறுமிக்கு எவ்விதமான உடல்நல குறைபாடுகளும் இல்லை. சிறுமி ஆரோக்கியமாகவுள்ளார் என தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தவேளை , தான் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் , சிறுமி தனது மகள் எனவும் கூறியுள்ளார். 

நீதிமன்றில் தந்தையை முற்படுத்தியதை அடுத்து , தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறும் , சிறுமியை சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது. 

Previous Post

யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர் ? – வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது அநீதியானது: பழ.நெடுமாறன் கண்டனம்

Next Post
பிரபாகரன் உயிருடன் இருக்கும் ஆதாரம்  வெளியிடுவேன் – பழ.நெடுமாறன்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பது அநீதியானது: பழ.நெடுமாறன் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures