5 லட்சம் ரூபா பெறுமதியான 4 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
கோவிலாக்கண்டியைச் சேர்ந்த 36 வயதுடையவரே கைது செய்யப்பட்டார். கஞ்சாவை சந்தேகநபர் அரியாலை பூம்புகார் பகுதியில் விற்பதற்காகக் கொண்டு சென்றுள்ளார்.
அதனைக் கொள்வனவு செய்வதாகக் கூறியவர்கள் வரும்வரை காத்திருந்போதே அங்கு சென்று அவரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.