பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டயாமாக்குதோடு கொவிட் தொழிநுட்பக் குழுவின் பரிந்துரைகள் மீள நடைமுறை படுத்துங்கள்.
மேலும் நாட்டில் மற்றொரு கொவிட் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கருத்து தெரிவிக்கையில்,
ஓமிக்ரோன் உலகளாவிய ரீதியில் பரந்த அளவில் பரவியுள்ளது. தற்போது இந்தியா மற்றும் சீனா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் பதிவு வீதம் அதிகரித்துள்ளது.
எனவே கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறும் பொது மக்களிடையே தகவல்களை வழங்குங்கள்.
மேலும் நிலையை கட்டுப்படுத்த மீண்டும் முகக்கவசம் அணிவதற்கும் தொழில்நுட்ப பரிந்துரைகளைப் நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப குழுவை மீள அழைக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்
வைத்தியசாலைகள், பொதுப்போக்குவரத்து, பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் வேறு நோய் தொற்று உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குங்கள்
கொவிட் தடுப்பூசி பெற்றுகொள்ளதவர்கள் அதனை முறையாக பெற்றுக்கொள்ளுங்கள்.செப்டம்பர் மாதத்திற்குள் நாடு மற்றொரு கொவிட் தொற்று நோய் நிலைக்குச் சென்றால் நிலையை கட்டுப்படுத்த போதுமான தடுப்பூசிகள் நம்மிடம் இருக்காது.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியால் மற்றொரு கொவிட் அலையினை கட்டுப்படுத்த முடியாது போகும்.
எனவே புதிய கொவிட் திரபுகளின் பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசங்களை தொடர்நது அணிவதோடு நான்காவது கொவிட் தொற்று தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்
இந்நிலையில் இதற்கு முன்னரான காலப்பகுதியில் ஐந்துக்கும் குறைவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் தற்போது ஒரு மாதத்திற்குள் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளைக்கு, ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை பதிவாகும் ஒரு கொவிட் மரணம் நாளொன்றுக்கு ஒரு மரணமாகவும் வாரத்திற்கு ஏழு இறப்பாகவும் பதிவாகியுள்ளது
எனவே ஊடக நிறுவனங்களும், பொறுப்புள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் கோவிட் புதிய துணை மாறுபாட்டின் பரவல் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வதோடு வைரஸை தடுப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை பற்றி மக்களுக்கு தெரிவிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.