சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 3,621 சங்குகளுடன் மன்னார் – ஆண்டான்குளம் பிரதேசத்தில் வைத்து சந்தேநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கண்டல்குளி பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபராவார்.
கடற்படையினர் மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 3,621 சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் – அடம்பன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

