தப்போவ சரணாலயத்தில் விடுவிக்க கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 359 புறாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கருவலகஸ்வெவ தப்போவ சரணாலயத்தில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் அக்குரணை, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட புறாக்கள் கருவலகஸ்வெவ கல்லூரி மைதானத்தில் பறக்கவிடப்பட்டதுடன், சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் முதாலம் திகதி புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.