Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

October 7, 2017
in News, Politics
0

தமி­ழர்­க­ளின் தாய­கக் கோட்­பாட்­டுக்­கான தியா­கங்­கள் விலை­ம­திக்க முடி­யா­தவை. இந்­தத் தியா­கங்­களை முஸ்­லிம்­கள் மலி­னப்­ப­டுத்­த­வில்லை. வடக்கு – கிழக்கு இணைப்­பில் முஸ்­லிம் சமூ­கத்­தின் வேண­வாக்­கள் அமுங்­கிப்­போ­கும் அபா­ய­முள்­ளது. வடக்கு -– கிழக்கை இணைக்க நாம் இணங்­க­மாட்­டோம்.
இவ்­வாறு அமைச்­ச­ரும், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரு­மான ரிசாட் பதி­யு­தீன் தெரி­வித்­தார்.
கொழும்­பில் நேற்­று­முன்­­தினம் முஸ்­லிம் சமூ­கத்­து­ட­னான சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
தமிழ்த் தரப்­புக்­கள் வடக்கு– கிழக்கு மாகா­ணங்­களை இணைக்­கக் கோரு­வ­தில் எந்­தத் தவ­றும் இல்லை. ஆனால், இவ்­விரு மாகா­ணங்­க­ளும் இணை­வதை அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ் கடு­மை­யாக எதிர்க்­கும்.
தமி­ழர்­க­ளின் தாய­கக் கோட்­பாட்­டுக்­கான தியா­கங்­கள் விலை­ம­திக்க முடி­யா­தவை. இந்­தத் தியா­கங்­களை முஸ்­லிம்­கள் மலி­னப்­ப­டுத்­த­வில்லை.
ஆனால் வடக்கு– கிழக்கு இணைப்­பில் முஸ்­லிம் சமூ­கத்­தின் வேண­வாக்­கள் அமுங்­கிப்­போ­கும் அபா­ய­ முள்­ளது. இந்த நிலை­யில் இவ்­விரு மாகா­ணங்­க­ளும் இணைக்­கப்­பட்டுக் காணிப் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளும் வழங்­கப்­பட்­டால் நில­மை­கள் இன்­னும் மோச­மா­கும்.
முல்­லைத்­தீவு மாவட்ட முஸ்­லிம்­க­ளின் காணிப் பிரச்­சி­னை­கள் இன்­னும் தீர்ந்­த ­பா­டில்லை. புலி­க­ளின் சிந்­த­னை­யில் வள­ரும் அர­சி­யல்­வா­தி­கள் சில­ரின் போக்­கு­கள் வடக்கு முஸ்­லிம்­களை மேலும் அச்­சத்­துக்­குள்­ளாக்­கியுள்ளது.
இணைப்­புக்கு ஆத­ர­வ­ளித்­தால் பேரி­ன­வா­தி­க­ளின் நெருக்­கு­த­லுக்கு தென், மேல் மாகா­ணங்­க­ளி­லுள்ள முஸ்­லிம்­கள் அகப்­ப­டும் அபா­ய­முள்­ளது.
நில­மை­களை நேரில் உணர்­ப­வர்­கள் என்­ப­தால் வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்க்­கி­றோம். கிழக்­கில் மூவின மக்­க­ளின் பிர­தி­நி­தி­ க­ளும் இணைந்து மாகாண நிர்­வா­கத்தைக் கொண்டு செல்­கின்­ற­னர்.
வடக்குக் கிழக்கை இணைத்­தால் இவ்­வொற்­றுமை இல்­லாது போகும். தமிழ்ப் பெரும்­பான்மை வாதத்தைப் பலப்­ப­டுத்­தும் பின்­ன­ணி­யிலே இந்­தக் கோரிக்கை எழு­கி­றது.
பிர­தேச காணிப் பிரச்­சி­னை­களைக் கொழும்பு அர­சின் காணி அமைச்­ச­ரி­டம் சென்று தீர்த்­துக் கொள்­வ­த­னூ­டாக மாகாண நிர்­வா­கங்­க­ளின் மோதல்­களைத் தவிர்க்க முடி­யும்.
மாகாண சபை­கள் திருத்­தச் சட்­ட­ வ­ரை­வுக்கு வாக்­க­ளிப்­ப­தில்லை என்ற எமது நிலைப்­பாடு, தலைமை அமைச்­ச­ருக்குக் காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்­டது.
அர­சி­டம் எம்மைத் துரோ­கி­ க­ளாகக் காட்டி அர­சி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்த எமக்­கெ­தி­ராக எடுக்­கப்­பட்ட முயற்­சி ­களைப் புத்­தி­சா­துர்­ய­மாக முறி­ய­டித்­தோம்.
பசில் ராஜ­பக்­ச­வு­டன் இர­க­சிய பேரம் பேசி அர­சைக் கவிழ்க்க நாம் சதி­செய்­துள்­ள­தாகப் புர­ளி­கள் பரப்­பப்­பட்­டன.
பல திருத்­தங்­களைச் செய்­வ­தென்ற தலைமை அமைச்­ச­ரின் இணக்­கப்­பாட்­டில் மாகாண சபைத் திருத்­தச் சட்­ட­வ­ரை­வுக்கு வாக்­க­ளிக்க நேர்ந்­தது.
எமது ஆத­ரவு இல்­லா­ம­லும் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறும் பலம் அர­சுக்கு இருந்­த­தால், காட்­டிக் கொடுப்­பி­லி­ருந்து தப்­பிக்க இந்­தச் சட்­ட­வ­ரைவை ஆத­ரித்­தோம்.
அர­ச­மைப்­பின் வழி நடத்­தல் குழு­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள எமது யோச­னை­க­ளில் முஸ்­லிம் சமூ­கத்­துக்குத் தேவை­யான பல­வி­ட­யங்­க­ளும் உள்­ள­டங்­கி­யுள்­ளன.
இவ்­வா­றான ஒரு யோச­னையை முஸ்­லிம் காங்­கி­ரஸ் முன்­வைக்­கா­ தமை பெரும் கவ­லை­ய­ளிக்­கின்­றது – என்­றார்.

Previous Post

காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த நவீன தொழில் நுட்ப முறைகள்

Next Post

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் !!

Next Post

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் வெடிக்காத நிலையில் மூன்று குண்டுகள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures