33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதியன்று அதிகாலை 5 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.
ஆண்கள் பங்கேற்றும் இந்த மரதன் போட்டியானது, காலி முகத்திடலிலிருந்து ஆரம்பமாகி காலி வீதியினூடாக மொரட்டுவை புதிய வீதி, பாணந்துரை ஊடாக களுத்துறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தின் அருகே நிறைவடைவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் பேரவை குறிப்பிடுகின்றது.
இதைத்தவிர, பெண்கள் பங்கேற்கும் 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டியாக நடத்த, போட்டி ஏற்பாட்டுக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 33 ஆவது இளையோர் விளையாட்டு விழா எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]