Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கம்பஹா மாவட்டம் ஒட்டுமொத்த சம்பியன்

December 23, 2021
in News, Sri Lanka News
0
33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கம்பஹா மாவட்டம் ஒட்டுமொத்த சம்பியன்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் புதன்கிழமை நிறைவடைந்த 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 170 புள்ளிகளைப் பெற்ற கம்பஹா மாவட்டம் ஏழாவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனானது.

இவ் விளையாட்டு விழாவில் 102 புள்ளிகளைப் பெற்ற கொழும்பு மாவட்டம் 2 ஆம் இடத்தையும் 93 புள்ளிகளைப் பெற்ற கண்டி மாவட்டம் 3 ஆம் இடத்தையும் பெற்றன.

இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளையோர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்திய 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பிரதான நிகழ்ச்சியான மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றன.

இருபாலாருக்கும் 20 வயதுக்குட்பட்ட, 20 வயதுக்குமேற்பட்ட பிரிவுகளில் நடத்தப்பட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 11 விளையாட்டு விழா சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.27 செக்கன்களில் நிறைவு செய்து புதிய சாதனை நிலைநாட்டிய குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கௌஷல்ய டயஸ் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 56.00 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய சாதனை நிலைநாட்டிய கம்பஹா மாவட்டத்தைச் செர்ந்த சயுரி லக்ஷிமா மெண்டிஸ் அதிசிறந்த பெண் மெய்வல்லநர் விருதை வென்றெடுத்தார்.

21 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.52 மீற்றர் தூரம் பாய்ந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த யசிது ஹேரத் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராகவும் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 1 நிமிடம் 00.44 செக்கன்களில் நிறைவு செய்த குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த கௌஷல்யா மதுஷானி அதிசிறந்த பெண் மெய்வல்லுராகவும் தெரிவாகினர்.

இவர்கள் நால்வருக்கும் கிண்ணங்களுடன் தலா 250,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.

அத்துடன் விளையாட்டு விழாவில் ஒட்டுமொத்த நிலையில் முதல் 3 இடங்களைப் பெற்ற கம்பஹா மாவட்டம், கொழும்பு மாவட்டம், கண்டி மாவட்டம் ஆகியவற்றுக்கு முறையே 150,000 ரூபா, 100,000 ரூபா, 75,000 ரூபா பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் பரிசளிப்பு மற்றும் முடிவு வைபவத்தின்போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு பிரதான பரிசில்களை வழங்கினார்.

நீதி அமைச்சர் அலி சபிர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான தமித்த விக்ரமசிங்க ஆகியோரும் பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 301 நபர்கள் குணமடைவு

Next Post

நடப்பு சம்பியன் ஜப்னாவுடன் மோதுகிறது காலி? | இறுதிப் பலப்பரீட்சை இன்று

Next Post
நடப்பு சம்பியன் ஜப்னாவுடன் மோதுகிறது காலி? | இறுதிப் பலப்பரீட்சை இன்று

நடப்பு சம்பியன் ஜப்னாவுடன் மோதுகிறது காலி? | இறுதிப் பலப்பரீட்சை இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures