சிரியாவில் அரச படைகளுக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியான போர் நடைபெற்றுவந்த நிலையில் அடுத்த ஒரு மாத காலத்துக்கு சிரியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘கவுடா’ நகரில் கடந்த ஒரு வாரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 600இற்கும் குறையாத மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சுமார் 60 வீதமானோர் குழந்தைகள்.
இதையடுத்து அங்கு போர் நிறுத்தத்தைச் செய்ய ஐ.நா. சபை கடுமையாக முயற்சித்து வந்தது. எதுவும் பயனளிக்கவில்லை. ரஷ்யா முட்டுக்கட்டையாக அமைந்தது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அங்கு 30 நாள்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.