உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட ஆசனங்களுக்கு மேலதிகமாக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் பல உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
‘உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது. அதற்கு அமைவாகவே இந்த அதிகரிப்பு முன்னெடுக்கப்பட்டது’ என்று தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
கலப்புமுறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றது. வட்டாரம் மற்றும் விகிதாசார அடிப்படையில் கட்சிகளுக்கு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றது.
உள்ளூராட்சி மன்றங்களில் கட்சிகளுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் ஆசனங்கள் கணிக்கப்படும்போது, கட்சிகள் மேல் மிகையான தொகையில் வட்டாரங்களைக் கைப்பற்றியிருந்தால், அந்தச் சபைக்கு அரசிதழில் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டதற்கு மேலதிகமாக ஆசனங்களை வழங்கவேண்டிய நிலை ஏற்படும்.
தவறவிடாதீர்கள்!
இதனால் வடக்கில், மன்னார் நகர சபை, காரை நகர் பிரதேச சபை, வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் தலா ஓர் ஆசனமும், மாந்தை மேற்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதே சபை, வலி. வடக்குப் பிரதே சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் தலா 4 ஆசனங்களும், வவுனியா வடக்கு பிரதே சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் தலா 3 ஆசனங்களும், வல்வெட்டித்துறை நகர சபை, புதுக்குடியிருப்பு நகர சபை ஆகியவற்றில் தலா 2 ஆசனங்களும் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.